முத்தியால்பேட்டையில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2400 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில், வரும் 3ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 3ம் தேதி, மாலை நடக்கிறது. 6:00 மணிக்கு, பெருமாள் தாயார் புறப்பாடு, மாலை மாற்றுதல், சீர்வரிசை சமர்ப்பித்தலுடன் திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது.பெருமாள் தாயார் ஊஞ்சல், நலங்கிடுதல், ஹோமம், பாலிகை பூஜை, திருமாங்கல்ய பூஜையை தொடர்ந்து, திருமாங்கல்ய தாரணம் செய்யப்படுகிறது. பின், சீர்பாடல், திருக்கல்யாண தளிகை சமர்ப்பித்தல், சாற்றுமுறை ஆகியவற்றை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி துரை பாலகிருஷ்ணன் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.