பழநியில் 3 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
ADDED :2721 days ago
பழநி : பழநி முருகன்கோயிலில் விடுமுறை நாளை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.பழநி முருகன்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகின்றனர். சனி, ஞாயிறு, கோடை விடுமுறை காரணமாக நேற்று பழநியில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு ரோப்கார், வின்ச்களில் செல்ல 2 மணிநேரம் வரை காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசன வழியில் 3:00 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.----