உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணுடைய நாயகி கோயிலில் மே 10 ல் வைகாசி விழா

கண்ணுடைய நாயகி கோயிலில் மே 10 ல் வைகாசி விழா

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசிவிழா கொடியேற்றம் மே 10 காலை 10:00 மணிக்கு மேல் 10:25 மணிக்குள், மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.


விழாவை முன்னிட்டு மே 11 முதல் மே 15 வரை தினமும் காலை 9:15 மணிக்கு வெள்ளி கேடயம் சுவாமி புறப்பாடு, இரவு 7:35 மணிக்கு சுவாமி வாகன புறப்பாடு நடக்கிறது. மே 16 காலையில் பல்லக்கு, மாலையில் கோயில் உட்பிரகாரத்தில் தங்கரதம், அன்னவாகனத்தில் வெளிவீதி புறப்பாடு, மே 17 அம்மன் அலங்கார மண்டபத்தில் காலை 8:30 மணிக்கு எழுந்தருளல், மாலை 5:00 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் பவனி வருதல், இரவு வெள்ளி குதிரை வாகனம், மே 18 அம்மன் திருத்தேரில் காலை 10:35 மணிக்கு பவனி, இரவு புஷ்ப பல்லக்கு, மே 19 காலை 10:30 மணிக்கு பூக்குழி இறங்குதல், இரவு புஷ்ப பல்லக்கு,மே 20 உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !