உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்தருக்கு ஒரே நாளில் 72 ஆயிரம் காணிக்கை

சித்ரகுப்தருக்கு ஒரே நாளில் 72 ஆயிரம் காணிக்கை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில், சித்ரா பவுர்ணமிக்காக வைக்கப்பட்ட தற்காலிக உண்டியலில், ஒரே நாளில், 72 ஆயிரத்து, 850 ரூபாய், பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


தென்னிந்தியாவிலேயே முதன்மையானதாக திகழும் சித்ர குப்த சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாத பவுர்ணமியின் போது, திருக்கல்யாண உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி விழா நடைபெறும்.இந்தாண்டு உற்சவம், 18, 19 தேதிகளில் விமரிசையாக நடந்தது. இதில், சித்ரா பவுர்ணமி விழாவான, 19ல், உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அவ்வாறு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக கோவிலில், ஏற்கனவே மூன்று உண்டியல் அமைக்கப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமி உற்சவத்திற்காக தற்காலிகமாக இரு உண்டியல் வைக்கப்பட்டன.இரு தற்காலிக உண்டியலும், கோவில் செயல் அலுவலர் வை.முருகேசன், சரக ஆய்வர் ஜெ.சுரஷே்குமார் மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், 72 ஆயிரத்து 850 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாகசெலுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !