உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திருநாவுக்கரசர் குருபூஜை விழா வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு

பண்ருட்டி திருநாவுக்கரசர் குருபூஜை விழா வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு

பண்ருட்டி:பண்ருட்டி அருகே திருநாவுக்கரசர் பிறந்த திருவாமூரில் குருபூஜை விழா நேற்று முன்தினம் (ஏப்., 27ல்) துவங்கியது.

சைவ சமய நால்வரில் முதன்மையான திருநாவுக்கரசர் பண்ருட்டி அடுத்த திருவாமூரில் பிறந்தவர். அவர் வாழ்ந்த இல்லத்தை கோவிலாக வழிபட்டு வருகின்றனர். அவர் வணங்கிய பசுபதீஸ்வரர் கோவில் அருகில் உள்ளது.

திருநாவுக்கரசர் கோவிலில் சித்திரை மாதம் குருபூஜை ( சதய உற்சவம்) விழா நேற்று முன்தினம் (ஏப்., 27ல்) துவங்கியது.விழாவில் திருப்பனந்தாள் காசி இளையமடாதிபதி திருஞானசம்பந்த தம்பிரான், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.நேற்று (ஏப்., 28ல்)காலை 6 மணிக்கு சிவபூஜை, 9 மணிக்கு திருமுறை இன்னிசை, 10 மணிக்கு நவக்கிரக ஹோமம், அபிஷேகம் நடந்தது.

வேலூர் தேவஸ்தான கட்டளை திருநாவுக்கரசர் தம்பிரான் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

மூலவர் திருநாவுக்கரசர் சிறப்பு வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று 29 ம்தேதி காலை 6 மணிக்கு சிவபூஜை, காலை 10 மணிக்கு ருத்ர ஹோமம், 11 தருமபுர ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் அப்பர் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !