செஞ்சி முனீஸ்வரன் கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED :2455 days ago
செஞ்சி:ஆனாங்கூர் மாரியம்மன், கெங்கையம்மன், முனீஸ்வரன் கோவிலில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
செஞ்சி தாலுகா ஆனாங்கூரில் உள்ள மாரியம்மன், கெங்கையம்மன், முனீஸ்வரன் கோவில் களுக்கு திருப்பணிகள் செய்து கடந்த 2017 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் இரண்டாம் ஆண்டு விழா நேற்று (ஏப்., 28ல்) நடந்தது.
இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு அனைத்து கோவில் களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு முனீஸ்வரன் கோவிலில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும், 9 மணிக்கு கலசாபிஷேகமும் செய்தனர்.
தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து மாரியம்மன், கெங்கையம் மனுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.