சங்ககிரியில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2400 days ago
சங்ககிரி: சங்ககிரி, தேவூர், நல்லங்கியூர் கட்டுக்குடி கம்பத்தையன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று (ஏப்., 28ல்), ஏராளமான பக்தர்கள், கல்வடங்கம் காவிரியாற்றிலிருந்து, புனித தீர்த்தக்குடம் எடுத்து, அங்காளம்மன் கோவில், கொட்டாயூர் வழியாக, ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, கணபதி ஹோமம், கோ, அஸ்வ பூஜை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, யாக பூஜை நடந்தது. இன்று (ஏப்., 29ல்) காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது.