உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மகா நவ சண்டி யாகம்: மழை வேண்டி வழிபாடு

சேலத்தில் மகா நவ சண்டி யாகம்: மழை வேண்டி வழிபாடு

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, அங்காள பரமேஸ்வரி கோவிலில், விகாரி ஆண்டு, சித்திரை மாத பெருவிழா, கடந்த, 27ல் தொடங்கியது. நேற்று (ஏப்., 28ல்) காலை, விக்னேஸ்வர பூஜையுடன், மகா நவசண்டியாகம் தொடங்கியது.

தொடர்ந்து, வருண பூஜை, வேதிகா பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்டவை நடந்தது. பின், பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட வாசனை திரவியங்களால் அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் நடந்தது.

வண்ண, வாசனை மலர்களால், அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தி, 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஒருசேர வேத மந்திரம் முழங்க, பல்வகை மூலிகைகளால், யாகம் நடந்தது.

மேள, தாளம் முழங்க, யாகத்தில், பூர்ணாஹூதி வைபவம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், சிவன், அம்மனுக்கு லட்சார்ச்சனை நடத்தி, மகா தீபாராதனை நடந்தது.
சிவாச்சாரியார்கள் கூறுகையில், ஆண்டுதோறும் சித்திரையில், உலக அமைதி, மழை வேண்டி நடத்தப்படும் யாகத்தால், நாடு செழிப்பதோடு, குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமண தடை நீங்கும். இன்னும் சில நாட்களில், வருண பகவான் கருணை காட்டுவார் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !