உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பக்தி சங்கீர்த்தனம் சென்னையிலிருந்து, 1,000 மாணவர்கள் பங்கேற்பு

திருமலையில் பக்தி சங்கீர்த்தனம் சென்னையிலிருந்து, 1,000 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை:திருமலை ஆஸ்தான மண்டபத்தில், பக்தி சங்கீர்த் தனங்கள், சகஸ்ரநாம பாராயணம் மேற்கொள்வதற்காக, சென்னையை சேர்ந்த, பள்ளி மாணவியர், 1,000 பேர், இன்று (ஏப்., 30ல்)திருப்பதி செல்கின்றனர்.

விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி, விஸ்வாஸ் விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் ஆகியவை இணைந்து, ஆண்டுதோறும், மே, 1ல், ஆஸ்தான மண்டபத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

முதன் முறையாக, சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 1,000, மாணவ - மாணவியர் தேர்வு செய்து, ஆஸ்தான மண்டபத்தில்ஆன்மிக நிகழ்ச்சி நடத்த உள்ளது.

இதற்காக, இன்று (ஏப்., 30ல்) அதிகாலை, ரயில் மூலம் அவர்கள், திருப்பதிக்கு செல்கின்றனர். இன்று (ஏப்., 30ல்) மதியம் முதல் நாளை மாலை வரை,பக்தி சங்கீர்தனங்கள், சகஸ்நாம பாராயணம், நகர சங்கீர்த்தனம், ஏக தின கோடி நாமாவளி ஆகியவற்றில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !