உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேர் மீண்டும் வலம்

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்கத்தேர் மீண்டும் வலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 16 அடி உயரமுள்ள தங்கத்தேர் புதியதாக செய்யப்பட்டு, கடந்த, 2006 மார்ச், 16 முதல் இயக்கப்பட்டு வந்தது.

கும்பாபிஷேக பணிக்காக கடந்த, 2015 ஜனவரியில் நிறுத்தப்பட்டு, மீண்டும் கடந்த, 2019 பிப்.,14ல், இயக்கப்பட்டது. தேரை, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூன்றாம் பிரகாரத்தில் இழுத்து வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த, 21ல், மெ.க.அன்னசத்திரத்தை சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சார்பில், தங்கத்தேர் இழுத்து சென்று வழிபாடு நடத்தியபோது, பிரகாரத்தில் இருந்த, மின்ஒயரில் தங்கத்தேரின் கலசம் சிக்கி, கீழே விழுந்து சேதமடைந்தது. பின் கடந்த, 22ல், தங்கத்தேரின் கலசம் சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் தங்கத்தேர் வலம் வந்தது. இதை, கலெக்டர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்டோர், தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !