ஸ்ரீரங்கத்திற்கு மங்கல பொருட்கள் அனுப்பும் விழா
ADDED :2355 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதரின் அவதார திருநாளையொட்டி, நடக்கும் தேரோட்டத்தின் போது அவர் சூடிக் கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் சூடிக்களைந்த மங்கலப் பொருட்கள் அனுப்பும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 4:30 மணிக்கு வெள்ளிக்கிழமை, குரட்டு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, பரிவட்டம், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் சூடப்பட்டு சிறப்பு பூஜைகளை சதிஷ் பட்டர் நடத்தினார். விழாவில் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராமன் பட்டர், ஸ்தானிகம் கிருஷ்ணன். ரமேஷ், ஹயக்ரீவஸ், மனியம் கோபி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் இந்த மங்கலப் பொருட்கள் மாட வீதிகள் சுற்றி ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.