ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
ADDED :2354 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி–திருநகரம் சாலியர் மகாஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் 8 ம் நாள் விழாவாகபெண்கள் கோயில் முன்பு விரதம் இருந்து பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஒன்பதாம் நாள் விழாவாக நேற்று பக்தர்கள் விரதம் இருந்து, 21,51,101 அக்னி சட்டிகள் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அதிகாலையில் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. 10ம் நாள் விழாவாகதிருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நிலையை அடையும். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.