உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் பூக்குழி விழா

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று மாலை தேர் பவனி நடந்தது. சிறப்பு அபிஷேகம், தீபாதனை செய்ய திருத்தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. அதிகாலையில் புஸ்ப பல்லக்கில் நகர் வலம் வந்த சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !