இன்று மைத்ர முகூர்த்த அமாவாசை
ADDED :2470 days ago
சித்திரை மாதம், மைத்ர முகூர்த்தத்துடன் கூடிய, இன்றைய சனி, அமாவாசை, 300 ஆண்டு களுக்கு ஒருமுறை வரக்கூடியது என்பதால், தனி சிறப்பு பெற்றுள்ளது.இந்த அமாவாசை நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், செல்வம் பெருகும்.இன்று, மைத்ர முகூர்த்தம் நேரத்தில், முன்னோர்களை வணங்கினால் நமக்கும், சந்ததிகளுக்கும் புண்ணியங்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.வாங்கிய கடன், மைத்ர முகூர்த்தத்தில் சிறு தொகை கொடுத்தாலும், அந்த கடன் முழுவதும், மிக விரைவில் அடைபட்டு போகும் என்பது நம்பிக்கை. ஆனால், மைத்ர முகூர்த்தம் என்பது சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.ஆனால், இன்று அதிகாலை, 3:20 மணி முதல் நள்ளிரவு, 11:54 மணி வரை ஆறு முறை, மணிக்கணக்கில் வருகிறது.