கொளத்தூர் கோவில் பண்டிகை: வனத்துக்குள் செல்லும் பக்தர்கள்
ADDED :2381 days ago
கொளத்தூர்: கொளத்தூர் அடுத்த, கத்திரிமலையில், 1,500 அடி உயரத்திலுள்ள மங்கம்மாள் கோவில் பண்டிகை, இன்று (மே., 5ல்) தொடங்கி, மூன்று நாட்கள் நடக்கும். தமிழக எல்லை யிலுள்ள பாலாறு வனப்பகுதியில், வாலாங்குழி ஓடை அருகிலுள்ள பாறையில், 200
ஆண்டுகளுக்கு முன், ஆஞ்சநேயர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலைக்கு, இன்று (மே., 5ல்) சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. பெரியதண்டாவிலிருந்து, மங்கம்மாள் கோவில், ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு, வனப்பகுதியில், 20 கி.மீ., வரை நடந்து செல்ல வேண்டும். இரு கோவில்களுக்கும், சாலை வசதி கிடையாது. இதனால், கொளத்தூர் சுற்றுப்பகுதியிலிருந்து, ஏராளமான பக்தர்கள் நடந்தே செல்ல தொடங்கியுள்ளனர்.