வாழப்பாடி ஊரணி கூத்தாண்டவர் கோவிலில், பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :2716 days ago
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பேளூர், கூத்தாண்டவர் கோவிலில், நேற்று (மே., 3ல்) காலை, சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், ஊரணி பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். மாலை, கூத்தாண்டவர் சிரசு மட்டும் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, மேள, தாளம் முழங்க, சுவாமி ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஊர்மக்கள் செய்திருந்தனர்.