கோபி சாரதா மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா
ADDED :2380 days ago
கோபி: கோபி, சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா பூச்சாட்டுதல், ஆகமவிதிப்படி நேற்று முன்தினம் (மே., 2ல்)இரவு, 11:00 மணிக்கு நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, வரும், 8ல் கம்பம் நடுதல், 13ல் சந்தனக்காப்பு அலங்காரம், 14ல், 108 திருவிளக்கு பூஜை மற்றும் பூச்சொரிதல், 15ல் மலர்பல்லக்கு, அம்மை அழைப்பு, 16ல் மாவிளக்கு, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், திருக்கம்பம் எடுத்தல், 17ல் மஞ்சள் நீர் உற்சவம், 18ல், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.