திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2557 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழாநடந்தது.
திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் தாமோதரன், சிவனடியார் ராஜம்மாள் திருவாசக
பாடல்களை பாடி திருவாசகம் முற்றோதல், வேள்வியை நடத்தினர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிவனடியார்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சேவுகன், கோயில் நிர்வாக அலுவலர்கள் செய்தனர்.