உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தம்... ஆனந்தம் பாடும் அட்சய திரிதியை நாளில்

ஆனந்தம்... ஆனந்தம் பாடும் அட்சய திரிதியை நாளில்

அட்சய திரிதியை தமிழ் மாதம் சித்திரை வளர்பிறை அமாவாசைக்கு பின் மூன்றாம் நாள், நாளை (மே 7) வருகிறது. அட்சயா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு என்றும் குறையாது என பொருள். அதனால் தான் இந்நாளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும் என்கிறார்கள். தங்கம் வாங்கினால் தீராத கடன் தீரும், வெள்ளி வாங்கினால் தோல் நோய்கள், மனக்குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும் என்பது நம்பிக்கை. இது தவிர கார், டூவீலர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மக்கள் வாங்குவர். இத்தனை மகத்துவம் மிக்க ஆனந்தம் பாடும் அட்சய திரிதியை நாளின் சிறப்பு, அன்று என்ன வாங்கப் போகிறோம் என மதுரை குடும்பத்தலைவிகள் மனம் திறக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !