உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே ராயபுரம் சர்ச் தேர் திருவிழா

சோழவந்தான் அருகே ராயபுரம் சர்ச் தேர் திருவிழா

சோழவந்தான்:-சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேனம்மாள் சர்ச் தேர்த்திருவிழா நடந்தது.

இத்திருவிழா ஏப்., 26 மதுரை வடக்கு வட்டார அதிபர் மரியமைக்கேல் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலிகள்நடந்தன.நேற்று முன் தினம் (மே., 5ல்) இரவுமதுரை மரியன்னை சர்ச் மற்றும்ஏசு சபை குழும அதிபர் மரியநாதன் தலைமையில் அன்னையின் அலங்கார தேர்பவனி வீதி உலா வந்தது.

இன்று (மே 6) காலை 7:00 மணிக்கு சர்ச் பங்குதந்தை எரோனிமுஸ்தலைமையில் நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !