உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோனியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

கோவை கோனியம்மன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்

கோவை : மழை பெய்ய வேண்டி, கோவை கோனியம்மன் கோவிலில் நேற்று (மே., 5ல்) சிறப்பு பூஜை, வருண ஜெபம் நடந்தது.

மாநிலத்தில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு, மழை பெய்ய வேண்டி, அனைத்து முக்கிய கோவில்களிலும், வருண ஜெபம், யாகம் நடத்த அறநிலையத் துறை உத்தர விட்டுள்ளது.

அதன்படி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்று (மே., 5ல்) கோவை கோனியம்மன் கோவிலில் நடந்த வருண ஜெப வேள்விக்கு, செயல் அலுவலர் கைலாஷ் தலைமை வகித்தார்.சிவராஜ் குருக்கள், பாபு குருக்கள் முன்னிலையில், ஓதுவார்கள், மழை வேண்டி வருண ஜெபம் செய்தனர். முன்னதாக, விக்னேஸ்வர பூஜை, கலச புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அபிஷேகத்துக்கு பின், தீபாராதனை காட்டி வழிபட்டனர். அறநிலையத்துறை அலு வலர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே., 6ல்) மழை வேண்டி யாகம் நடக்கிறது. மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோவிலில், நாளை 7ம் தேதி சிறப்பு யாகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !