கீழ்மாம்பட்டில் 1008 பால்குட அபிஷேகம்
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம் நடந்தது.
செஞ்சி தாலுக்கா கீழ் மாம்பட்டு கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், சீனிவாசப்பெருமாள், அம்மச்சார் அம்மன் கோவிலில் 19 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, பத்தாம் ஆண்டு ரத உற்சவம் விழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாவது நாள் விழாவாக நேற்று அம்மச்சார் அம்மனுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடந்தது. பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.விசேஷ திரவியங்களுடன், அம்மச்சார் அம்மன், சீனிவாசப்பெருமாள், செல்வ விநாயகருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் மூர்த்தி, பத்மினிதேவி மூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டன். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிளக்கு பூஜை 10 தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் 12 ஆம் தேதியும் நடக்க உள்ளது.