உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் அம்மனை குளிர்விக்க 1,008 இளநீர் அபிஷேகம்

குமாரபாளையம் அம்மனை குளிர்விக்க 1,008 இளநீர் அபிஷேகம்

குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில் அம்மனை குளிர்விக்க, 1,008 இளநீர் அபிஷேகம் நடந்தது. நேற்று (மே., 5ல்) அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், பொது மக்களை வெப்பத்தில் இருந்து காக்கவும், நோய், நொடியின்றி வாழ வைக்கவும், விவசாயம் செழிக்க மழை வளம் பெருகவும், அம்மனை குளிர்விக்க வேண்டி, 1,008 இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல அபிஷேகங்களும் நடந்தன. செயல் அலுவலர் விஸ்வநாதன், தலைமை அர்ச்சகர் சதாசிவம், நிர்வாகிகள் ராஜு, மணி பூசாரி சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !