நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் உறுதிபூசுதல் வழங்கும் விழா
ADDED :2349 days ago
நாமக்கல்: நாமக்கல், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் வழங்கும் பட்டமளிப்பு விழா நடந்தது. நாமக்கல், திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புது நன்மை மற்றும் உறுதிபூசுதல் வழங்கும் பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மறை மாவட்ட ஆயர் டாக்டர் சிங்கராயர் தலைமை வகித்து, திருச்சபை பணிகளில் ஈடுபடுவதற்காக, 52 சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் பட்டமளித்தார். நாமக்கல் பங்கு தந்தை ஜான் அல்போன்ஸ் மற்றும் உதவி பங்கு தந்தை அருள் சுந்தர் உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.