குன்னூரில் மாரியம்மன் ஊர்வலம்
கோத்தகிரி : குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நேற்று (மே., 5ல்) அம்மன் ஊர்வலம் நடந்தது.
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் உபயதாரர்களின் சார்பில், அம்மன் ஊர்வலம், அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று (மே., 5ல்) தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில், ஊர்வலம் நடந்தது. துர்கையம்மன் கோவிலில் இருந்து, பறவை காவடி, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க தந்தி மாரியம்மன் கோவில் சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, மலர் அபிஷேக அலங்கார வழிபாடு நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்னிசை நிகழ்ச்சி, ஆடல் பாடல் உள்ளிட்டவை நடந்தன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.