ஈரோடு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 8ல் பொங்கல்
ADDED :2348 days ago
ஈரோடு: பாலக்காடுமேடு, சமயபுரம் மாரியம்மன் கோவில், பொங்கல் விழா நாளை 7ல், துவங்குகிறது.
ஈரோடு, முத்தம்பாளையம் பகுதி-1, பாலக்காடுமேட்டில் உள்ள, சமயபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மாதம், 30ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நாளை 7ல், மாலை தீர்த்தம் கொண்டு வருதல், அபிஷகம் நடக்கிறது. 8ல் மாவிளக்கு பூஜை, அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைபவம் நடக்கிறது. 9ல் கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு, மறுபூஜை நடக்கிறது.