ஈரோடு சீதேவி அம்மன் கோவிலில் 8ல் ரதோற்சவம் துவக்கம்
ADDED :2349 days ago
ஈரோடு: சீதேவி அம்மன் ரதோற்சவ விழா, 8ல் துவங்குகிறது. பெருந்துறையை அடுத்த, காஞ்சி கோவில் சீதேவி அம்மன் ரதோற்சவ விழா, ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடக்கிறது. நடப்பாண்டு விழா, வரும், 8ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இதையடுத்து, 16ல் கிராமசாந்தி, 17ல் கொடியேற்றம், 22ல் தீர்த்த குடம் எடுத்தல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதல், பொங்கல் வைபவம், அக்னி அபிஷேகம், அம்மன் ரதமேறுதல், 23ல் நடக்கிறது. 24ல் தேர் வடம் பிடித்தல், 25ல் தேர் நிலை சேர்தல் நடக்கிறது. மஞ்சள் நீர் மற்றும் மறுபூஜை, 26ல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், செய்து வருகின்றனர்.