கோவில்பாளையத்தில் மழை வேண்டி காலகாலேஸ்வரருக்கு வருண ஜபம்
ADDED :2343 days ago
கோவில்பாளையம்:கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடந்தது.தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. போதுமான பருவ மழை பெய்யாமல் அனல் அடிக்கிறது. நிலத்தடி நீர் மட்டம், 1,200 அடிக்கு கீழ் சென்று விட்டது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பிரசித்தி பெற்ற கோவில்களில் மழை வேண்டி யாகம் மற்றும் வருண ஜபம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி நேற்று (மே., 6ல்) கோவில்பாளையம் காலகாலேஸ் வரர் கோவிலில் நேற்று (மே., 6ல்) காலையில் தேவாரத் திலிருந்து மழை பதிகங்கள் பாடப்பட்டன. மழை வேண்டி நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பாடப்பட்டன. சிறப்பு யாகமும், வழிபாடும் நடந்தது.