உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைப்பே நிரந்தர சொத்து

உழைப்பே நிரந்தர சொத்து

மகனுக்கு பிறந்தநாள் பரிசாக  தங்கப் பொம்மை கொடுத்தார் ஒருவர்.  “மகனே! வாழ்வில் எந்த நிலையிலும் இந்த பொம்மையை தொலைத்து விடாதே. ஏதாவது பணத்தேவை ஏற்பட்டால், இந்த பொம்மை கைகொடுக்கும்” என்றார்.  சில காலத்துக்குப் பின் அவர் இறந்தார். ஒருமுறை  சிலநாட்கள் தனது பண்ணை வீட்டில் தங்கி விட்டு திரும்பினான். அந்த நேரத்தில் திருடர்கள் பொம்மையை திருடி விட்டனர். வேதனையால் தன் கடமைகளில் சரிவர ஈடுபடவில்லை. ஒரு கட்டத்தில் நஷ்டம் தொடரவே பண்ணையை விற்றான். ஒருநாள் தனது சொந்த கிராமத்திற்குச் சென்றான்.

அங்கு உறவினர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டான். அங்குள்ள பெரியவர் ஒருவர், “அருமை பிள்ளைகளே! நிலம், பணத்தை ஒருபோதும் நம்பாதீர்கள். இவை நம் கையை விட்டு போய் விடலாம். உழைப்பே என்றும் நிலையானது.  பணக்காரர்கள் என்ற நினைப்பில் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்காதீர்கள். அதுவே உங்களுக்கு கைகொடுக்கும்” என்றார். தங்கப் பொம்மைக்கு பதிலாக என் தந்தையும் இந்த நல்ல அறிவுரை அளித்திருந்தால் கவலையின்றி இருந்திருப்பேனே என வருந்தினான்.
ஆம்... உழைப்பே நிரந்தரச் சொத்து. மற்றவையெல்லாம் சூழ்நிலைகளால் அழியக் கூடியவை. ’உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை’ என்ற வசனத்தை மறவாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !