உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் மே 9ல் வைகாசி விசாக விழா

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் மே 9ல் வைகாசி விசாக விழா

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா மே 9ல் துவங்கு கிறது.குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

மே 9ல் காலை 7:15 ரிஷப லக்கனத்தில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு 7:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள், சிவாச்சார்யார், வில்வ மரத்திற்கு காப்புக் கட்டி விழா துவங்கும். தொடர்ந்து சுவாமி,அம்பாள், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து தினசரி இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். மே 12 காலை திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு தீபாராதனை, மே 13ல் அம்மன் தவத்திற்கு எழுந்தருளலும், திருக்கல்யாணமும், மே17ல் தேரோட்டம், மே 18ல் தெப்பத் திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !