உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் வருடாபிஷேக விழா துவக்கம்

சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் வருடாபிஷேக விழா துவக்கம்

சாயல்குடி:சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில். வருடாபிஷே கத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன்முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது.

சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் தலைமை வகித்தார்.காலை 9:30 மணிக்கு கொடியேற்றமும், காப்பு கட்டும் உற்ஸவமும் நடந்தது.மே 9 இரவு 7:00 மணிக்கு தர்ம முனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சைப் பல்லக்கில் வெள்ளி கமலம், திரிசூலம், திருப்பாதுகைகளுடன் வேட்டை மார்க்கமாக குண்டாற்றுக்கு சென்று அங்கே துஷ்ட நிக்ரஹ சுத்த பரிபாலனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

மே 10 காலையில் குண்டாற்றில் தீர்த்தவாரியும், பால்குடம், காவடி, அக்னிச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளுடன் நடக்கிறது.ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.வெளியூர் பக்தர்களுக்கு தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !