உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அருகே, மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்: 24 வாகனங்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம்

குளித்தலை அருகே, மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்: 24 வாகனங்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம்

குளித்தலை: குளித்தலை அருகே, மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சிக்கு, 24 மின் அலங்கார வாகனங்களில் பூக்கள் கொண்டு வரப்பட்டன. குளித்தலை அருகே, முத்து பூபால சமுத்திரம் மஹா மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.

திருவிழாவின் முதல் நாளான நேற்று (மே., 6ல்), மணத்தட்டை, வாலாந்தூர், பாரதிநகர், கடம்பர் கோவில், பெரியபாலம், மலையப்பன்நகர், மருதூர், மேட்டுமருதூர் உட்பட, 24 கிராமங்களில் இருந்து, மின் அலங்கார வாகனத்தில் அம்மன் சிலையை வைத்து, மேள தாளத்துடள், பக்தர்கள் பூக்கள் கொண்டு வந்தனர். இதேபோல், பஸ் ஸ்டாண்டில் வாடகை கார், ஆட்டோ உரிமையாளர், டிரைவர் சங்கம் சார்பில் பூச்சொரிதல் விழாவுக்கு பூத்தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

குளித்தலை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து பொதுமக்கள் இரவு முழுவதும் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !