உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி தரிசனம்!

பவுர்ணமி தரிசனம்!

சென்னை மீஞ்சூர் அருகில் மேலூரில் அருளும் திருவுடை நாயகி, திருவொற்றியூரில் அருளும் வடிவுடை நாயகி, திருமுல்லைவாயிலில் அருளும் கொடியிடை நாயகி ஆகிய மூவரையும் முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக ஞான நூல்கள் போற்றுகின்றன. பவுர்ணமி நாள்களில் இந்த மூவரையும் முறைப்படி வழிபட சகல ஐஸ்வரியங்களும் வந்து சேரும்.

பவுர்ணமி அன்று காலையில் (6 முதல் 12 மணி வரை) மேலூர் திருவுடைஅம்மனைத் தரிசிக்க வேண்டும். மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, வெற்றிலைப் பாக்கு, புஷ்பம், தேங்காய்பழம் சமர்ப்பித்து இந்த அம்மனை வழிபட வேண்டும். இது முதல் தரிசனம். நண்பகலில் (12 முதல் மாலை 6 மணி வரை) திருவொற்றியூர் வடிவுடை அம்மனைத் தரிசிக்க வேண்டும். இந்த அம்பாளுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடலாம். அடுத்து திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிக்க வேண்டும். இந்த அம்பாளுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !