உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

சென்னையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

சென்னை:மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா, நாளை (மே., 9ல்) விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

சென்னை, மாங்காட்டில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில், அம்பாள் தவம் புரிந்த இடத்தில், ஆதிசங்கரர், அஷ்ட கந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன, அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அதுவே, இக்கோவிலின் பிரதானமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆதிசங்கரர் ஜெயந்தி, இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, ஆதி சங்கரர் ஜெயந்தியான நாளை  (மே., 9ல்) காலை, 7:30 மணிக்கு, கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஆதிசங்கரர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !