உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் மழை வேண்டி வருணஜெபம்

உத்தரகோசமங்கை கோயிலில் மழை வேண்டி வருணஜெபம்

உத்தரகோசமங்கை:-உத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்றது. மே 3ல் துவங்கிய
அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கத்தால் ஜீவராசிகள் தவிக்கின்றன.

இந்த நிலையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள நந்திக்கு தொட்டி கட்டி அதனுள்ள தண்ணீர் முழுவதுமாக ஊற்றி ஜல நிவர்த்தி
பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

யாகத்தில் பட்டுப்புடவைகள் இடப்பட்டது. சமஸ்தான செயல் அலுவலர் ராமு, கோயில் ஸ்தானிக குருக்கள்ரவி, கணேசன், விஸ்வநாதன், பாலாஜி அய்யர், சுரேஷ் அய்யர், ஓதுவார்
விஜயமுருகன், பேஷ்கார் வீரசேகரன், திருப்புல்லாணி பேஷ்கார் கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புனித கலசத்தில் உள்ள நீரை நந்தி பகவானுக்கும், அக்னித்தீர்த்த தெப்பக்குளத்திற்கும் ஊற்றப்பட்டு மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !