சிக்கல் அருகே திருவாசகம் முற்றோதல்
ADDED :2349 days ago
சிக்கல்:சிக்கல் அருகே சதுர்வேதமங்கலம் கிராமத்தில் உள்ள சிவகாமி சமேத ஆதி அனந்தீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவாசகப்பாடல்கள் பாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை எம்.எஸ்.கே.பாக்கியநாதன், செல்லத்துரை ராமசாமி, பூஜகர் முனியசாமி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றினர்.