திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் திருவிழா துவக்கம்
ADDED :2349 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நாளை (மே 8) காலை 8:00 மணிக்கு அனுக்ஞை வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது.
மறுநாள் காலை 10:00 மணிக்கு கொடியேற்றம், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 17 மாலை தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும்.
விழா நாட்களில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் பூதம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், குதிரை போன்ற வாகனங்களில் வீதி உலா செல்வர். விழா ஏற்பாடு களை தேவஸ்தான செயல்அலுவலர் புவனேஸ்குமார் மற்றும் 22 கிராமத்தினர் செய்து வருகின்றனர்.