சிக்கல் பத்திரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
ADDED :2349 days ago
சிக்கல்:சிக்கல் நீராவி ஊரணியின் மேற்கு கரைப்பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, கும்ப கலசங்களில்
கோயில் கோபுரத்தில் சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றினார்.
மூலவர் அம்மனுக்கு 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். பெண்கள் பொங்கலிட்டனர். சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.