உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் கரக ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி மாரியம்மன் கரக ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி:கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று 7ல், கரக ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.கோத்தகிரி கடை வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

விழாவின் ஒரு பகுதியாக, அம்மன் மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலம்; 11:00 மணிக்கு, அபிஷேகம் அலங்கார வழிபாடும் நடந்தது.தொடர்ந்து, 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலை, 4:00 மணிக்கு, அம்மன் கும்பம் திருவீதி உலா நடந்தது.

கடைவீதி, காம்பாய் கடை, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், காமராஜர் சதுக்கம், டானிங்டன் பகுதி வழியாக சென்ற ஊர்வலம், கரும்பாலம் ஆற்றில், அம்மனை திருவிடையாற்றல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !