உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொடக்குறிச்சியில் அக்ஷய திருதியை முன்னிட்டு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம்

மொடக்குறிச்சியில் அக்ஷய திருதியை முன்னிட்டு ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, கணபதிபாளையம் நால்ரோட்டை அடுத்த, நஞ்சை காளமங்கலம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 300 ஆண்டு
பழமையானதாகும். அக் ஷய திருதியை முன்னிட்டு, ஸ்ரீமஹா சுதர்சன ஹோமம் நேற்று (மே., 7ல்) நடந்தது. இதையொட்டி காலை, 5:00 மணிக்கு புண்யஹாவசனம், விஷ்வக்ஷேன ஆராதனை நடந்தது.

இதை தொடர்ந்து கும்ப ஆராதனம், அக்னி ஆராதனம், திரவிய ஹோமம், சுதர்சன மகா யக்ஞம், பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து கோபூஜை, மஹா சுதர்சன ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வரதராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. இதன் பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !