ஈரோடு சிருங்கேரி மடத்தில் ஆதி சங்கரர் ஜெயந்தி
ADDED :2350 days ago
ஈரோடு: ஆதி சங்கரர் ஜெயந்தி விழா, பவானி சிருங்கேரி மடத்தில் நடக்கிறது. ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு, பவானி காவேரி வீதியில் உள்ள, சிருங்கேரி மடத்தில் ஆதி
சங்கரர் விழா நடந்து வருகிறது. நாளை (மே., 9ல்) காலை ஆதி சங்கரர் உருவ படம் வீதியுலா, வேத பாராயணம் நடக்கிறது. மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், தேவி
நமஸ்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை சிருங்கேரி மடத்தின் தர்மாதிகாரி வெங்கட்ராமன் செய்துள்ளார்.