ஆர்.கே.பேட்டை கங்கையம்மன் ஜாத்திரை கோலாகலம்
ADDED :2350 days ago
ஆர்.கே.பேட்டை:சித்திரையில் மழை வேண்டி, கங்கை யம்மனுக்கு நடத்தப்படும் ஜாத்திரை திருவிழா, ஆர்.கே.பேட்டையில் நடந்தது.
கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், கங்கையம்மனை வேண்டி, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். சித்திரை மாதம், செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் ஜாத்திரை திருவிழா, ஆர்.கே.பேட்டையில் கொண்டாடப்பட்டது.ஆர்.கே. பேட்டை, கங்கையம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில்களில், பெண்கள், நேற்று (மே., 7ல்) காலை பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனாக, பல்வேறு வேடம் தரித்து வீதி வலம் வந்தனர்.