தொண்டாமுத்தூர் பட்டீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்
ADDED :2458 days ago
தொண்டாமுத்தூர்: மழை வேண்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகம் நடந்தது.இதில், நந்திகேசுவரருக்கு வெட்டிவேர், விலாமிச்சுவேர், குங்குமப்பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் அடங்கிய நீர் ஊற்றப்பட்டது. ஓதுவார்கள் மழை வேண்டி பதிகங்கள் பாடி, வருண ஹோமம் முடிந்தபின், புனித கலச நீரை கொண்டு பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன், நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். அதனை தொடர்ந்து, மகா
தீபாராதனையும் நடந்தது. இதில், அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.