உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா துவக்கம்

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா மகோற்சவம் இன்று (மே., 9ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி, இன்று (மே., 9ல்þ காலை பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் சுவாமிக்கு மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து உற்சவ
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொடியேற்றத்துடன் வைகாசி பெருவிழா மகோற்சவம் துவங்குகிறது.தொடர்ந்து தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, வீதியுலா நடக்கிறது.உற்சவத்தில் 13ம் தேதி தெருவடைச்சான் சப்ரத் தேரோட்டம், 14ம் தேதி வெள்ளி ரதம், 15ம் தேதி கைலாச வாகன கோபுர தரிசனம், திருக்கல்யாணம் பரிவேட்டை, 17ம் தேதி சுவாமி தேரோட்டம், 20ம் தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் செயல் அலுவலர் முத்துலட்சுமி
செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !