இளையான்குடி மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2462 days ago
இளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி அழகிய மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த 6ஆம் தேதி முதல், யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், உட்பட பல யாக பூஜைகள், ஹோமங்கள் செய்யப்பட்டது. நேற்று (மே., 8ல்) காலை 10:30 மணிக்கு கோபுர கலசங்களிலும், மூலஸ்தானத்திலும், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், அர்ச்சனை செய்யப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.