உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவிலில் வைகாசி விழா கொடியேற்றம்

காளையார்கோவிலில் வைகாசி விழா கொடியேற்றம்

சிவகங்கை:காளையார்கோவிலில் உள்ள சோமேஸ்வரர் சமேத சவுந்திரநாயகி ஆலயத்தில் வைகாசி விசாக திருவிழா நேற்று (மே., 9ல்) காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 8 இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை , விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது. முதல் நாளான நேற்று காலை 10:45 மணிக்கு சோமேஸ்வரர் சன்னதி முன் உள்ள கொடிகம்பத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.சவுந்திரநாயகியுடன் எழுந்தருளிய சோமேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். சுவாமி அம்பாள் உட்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி அம்பாளுடன் கேடகம், வெள்ளி ரிஷபம், கிளி, யானை, சிம்ம வாகனங்களில் புறப்பாடு நடக்கும். விழாவின் 9ம் நாளான மே 17 அன்று அதிகாலை 4:00 முதல் 5:00 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார். சிறப்பு அபிஷேகத்திற்கு பின், காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10 ம் நாளான மே 18 அன்று தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் ஸ்தானிகம் காளீஸ்வர குருக்கள், கண்காணிப்பாளர் சரவண கணேசன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !