பழநியில் மழைவேண்டி ருத்ரயாகம்
ADDED :2473 days ago
பழநி: பழநியில் உலக மக்கள் நன்மைக்காவும், மழை வேண்டியும் மகாருத்ர யக்ஞம், யாகபூஜை மற்றும் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடந்தது. பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள சீதாராம பஜனை சமாஜம் மடத்தில், மே 5 முதல் 9 வரை உலகமக்கள் நன்மைக்காவும், மழைவேண்டி வேதபாராயணம், மகாருத்ர யக்ஞம் நடந்தது. நேற்று (மே., 9ல்) ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, மகான்யாசம், ருத்ர ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஆதிசங்கரர் வீதிஉலா நடந்தது. கும்பகோணம், சென்னை, பழநியைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.