காஞ்சிபுரம் வரதர் பிரம்மோற்சவத்திற்கு , பந்தல் அமைப்பு
ADDED :2478 days ago
காஞ்சிபுரம்:வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, பந்தல் அமைக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், வரும், 17ம் தேதி காலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்விழாவைக்காண, ஏராளமான பக்தர்கள்,
கோவிலுக்குச்செல்வர்.இத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், வெயிலில் நிற்க சிரமப்படுவர். எனவே, கோவில் வெளியில் இருந்து, 16 கால் மண்டபம் வரை, பந்தல் அமைக்கப்பட்டு
வருகிறது.துவக்க விழாவுக்கு பின், மூன்றாம் நாளில், கருட சேவை; 7ம் நாளில், தேரோட்டம்; 9ம் நாளில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.வரும், 26ல், பிரம்மோற்சவம் நிறைவுபெறுகிறது.