காஞ்சிபுரம், சந்தவெளி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.17.93 லட்சம் காணிக்கை
ADDED :2477 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சந்தவெளி அம்மன் மற்றும் குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவில் உண்டியல்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக, 17.93 லட்சம் ரூபாய்
கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம், சந்தவெளி அம்மன் கோவிலில், கோவில் செயல் அலுவலர் கவிதா, ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 1.72 லட்சம் ரூபாய், 26 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளி கிடைத்தது.அதே போல், காஞ்சிபுரம், குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவிலில், உதவி ஆணையர், சுப்ரமணியம், செயல் அலுவலர், தியாகராஜன் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 16.21 லட்சம் ரூபாய், 33 கிராம் தங்கம், 590 கிராம் வெள்ளி கிடைத்தது.