புதுச்சேரி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2701 days ago
புதுச்சேரி: செம்பியப்பாளையம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த செம்பியப்பாளையம் கிராமத்தில் உள்ள செங்கழுநீர்
மாரியம்மன் கோவில் விழா கடந்த 7ம் தேதி துவங்கியது.
அன்று காலை கரக வீதியுலா மதியம் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முனத்தினம் (மே., 8ல்) மாலை 6.00 மணிக்கு
அய்யனாரப்பன்-பொற்கிலை பூரணி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று (மே., 9ல்) அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும்
கிராம மக்கள் செய்தனர்.